Friday, February 15, 2008

மரப் பிரபோ... ஞானம்

அதிகமாக சம்ஸ்கிருத ஞானமில்லாத ஒருத்தர், ரொம்பவும் பக்தியோடு
தினமும் 108 தடவை சொல்லி வந்தார்.
"பத்மநாபோ, மரப் பிரபு"

'பத்மநாபோ அமரப் பிரபு;' என்று பதம் பிரித்துச் சொல்றதுதான் சரி. அமரர்களின் (தேவர்களின்) பிரபுவே-அரசனே என்று அர்த்தம்.

ஆனால் 'மரப் பிரபோ' என தப்பாகப் பதம் பிரித்தவர் மரங்களுக்கு அரசனே என்று அர்த்தம் பண்ணிக் கொண்டார். தினமும் ஒரு மரத்தை
' பதமநாபோ மரப்பிரபோ' என்று கூறி 108 தடவை பிரதட்சணம் பண்ணினார்.
அந்த வழியே போன சம்ஸ்கிருத பண்டிதர் இதைப் பார்த்து நடுங்கிப் போயிட்டார். தவறாக உச்சரித்தவரை நிறுத்தி, திருத்தினார். உங்கள் வாக்கு சரியில்லை. ' பதமநாபோ அமரப் பிரபோ' என சொல்ல வேண்டும் என்று கூறி அர்த்தத்தையும் விளக்கினார்.

தவறாக கூறியவர் பண்டிதரிடம் "அடாடா! தெரியாமல் சொல்லி விட்டேனே... எனக்குப் பாவம் சம்பவிக்குமா?" எனக் கேட்டார் கவலையுடன். அதெல்லாம் வராதுப்பா என கூறிவிட்டுச் சென்று விட்டார்.

மறுநாளிலிருந்து திருத்தி உச்சரிக்க ஆரம்பித்தார் முதலாமவர். மரத்தைச் சுற்றுவதை நிறுத்திவிட்டு, திண்ணையில் அமர்ந்து 'பதமநாபோ அமரப் பிரபோ' என்று கூறி வந்தார்.

அன்று இரவு திருத்திய பண்டிதரின் கனவில் பகவான் வந்தார்.

"உம்மை யார் அந்த பக்தரைத் திருத்தச் சொன்னார்? நீர் திருத்திய பிறகு அவர் மரத்தைச் சுற்றுவதை நிறுத்திவிட்டார்... அப்படியானால் நான் மரங்களுக்குப் பிரபு இல்லையா? என்று வினவினார். நீர் திருத்தச் சொன்னதால் 108 பிரதட்சணம் செய்வதை அவர் நிறுத்தினார்.

திரும்பவும் போய் அவரிடத்தில் சொல்லு..." - ' மரப் பிரபு ' என்றே சொல்லச் சொல்லு...." என்று கோபித்துக் கொண்டார்.

குழந்தை சரியாக உச்சரிக்காவிட்டாலும் மகிழ்ச்சியோடு நாம் கேட்கவில்லையா....? அதுபோலத்தான் எல்லையற்ற கருணையுடைய
பகவானும் நம்மைக் குழந்தையாகப் பாவித்துக் கேட்கிறான்.

நன்றி -- மூலம் -->http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a&start=15

1 comment:

கபீரன்பன் said...

எளியருக்கும் எளியவன் இறைவன் ! அழகான கதை. தங்களது பிற பதிவுகளும் பாராட்டும்படி உள்ளது. தொடருங்கள் உங்கள் நற்பணியை.