கீதையை பற்றிய பதிவுகள் அனைத்தும், திருமதி.பத்மஜா அவர்களால் எழுதப் பட்டது.
நான் படித்ததில் பிடித்ததாய் இங்கு குறித்து வைத்துள்ளேன்...
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a
கண்ணனின் உபதேசம் உலகின் உன்னத கீதம் அல்லவோ
அதை எளிய நடையில் எழுத முயல தூண்டுவதும் என் கண்ணனல்லவோ
பலர் பல விதத்தில் பொருளாய்வு செய்த உண்மையல்லவோ
இருப்பினும் என்னை வேண்டுவது யாதவ குலத் திலகமல்லவோ
என் வெற்றியின் அகந்தையை அறவே அழிக்குமல்லவோ
தோல்வியை கண்டு துவளும் என்னை அரவணைக்குமல்லவோ
கண்ணீரை துடைக்கும் உன்னத கையாக மாறுமல்லவோ
சிரித்து வாழும் கலையைதான் உணர்த்துமல்லவோ
இம்முயற்சிக்கு பின்னே என் சுயநலமும் உண்டு
என் வாழ்க்கை முறையை மாற்றும் சக்தியும் இதற்கு உண்டு
சிந்திக்க சிந்திக்க பல உண்மைகள் புரிவதுண்டு
என்னுள் தாக்கத்தை உண்டு பண்ணும் ஆற்றலுமுண்டு
உறவுகளை அணைத்துக் கொள்ளும் நுணுக்கமும் உண்டு
இருப்பினும் தாமரை இலைபோல் வாழ இனி மார்க்கமும் உண்டு
உணர்வுகளை கையாளும் அழகும் வர வாய்ப்புண்டு
முடிவில் தூய்மையை மட்டுமே தாங்கி வாழும் காலம் வருவதுண்டு
இதில் வெற்றி கிட்டுமா என்று தெரியவில்லை
தொடர்ந்து முடியுமா என்று புரியவில்லை
புரிந்து எழுதுவேனா என்று சொல்வதற்கில்லை
புரியாமலே கதை கட்டுவேனா என்றும் தெரியவில்லை
கருத்து பொழிவு இருக்க வாய்ப்புமில்லை
உண்மையை வெளிக் கொணரும் ஆற்றலும் எனக்கில்லை
மொழி இலக்கணம் துளியும் கை வரவில்லை
இருப்பினும் என் வாழ்க்கை இலட்சியத்தை கைவிட மனமில்லை
என் தோழனும் குருவுமான கண்ணனை
நான் புரிந்துக் கொண்ட அறிந்து கொண்ட கிருஷ்ணனை
என் வார்த்தைகளால் முதலில் வந்தனம் கூறிவிட்டு
பிறகு கீதையின் சாரத்தை புரிந்துக் கொள்ள முயலப் போகிறேன்
அதன் அருமையையும் அறிந்து வாழக் கற்றுக் கொள்ள போகிறேன்
இதோ என் மூளையை வரும் மாதங்களிலோ வருடங்களிலோ
செதுக்க போகிறேன் தீவிரமாக ஆனால் மிக மெதுவாக
அழகிய உருக்கொண்டு என் படைப்பு மாற
என் கண்ணனை பிடிக்க செல்கிறேன் முதலில்
விருப்பமிருந்தால் வாருங்கள் என்னுடன்
அன்பே சிவம் -பத்மஜா
Friday, February 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment