ராமரும், லட்சுமணனும், சீதையும் தண்டகவனத்தில் ஒரு ஆசிரமத்திலிருந்து இன்னொரு ஆசிரமத்திற்கு சென்ற வரலாறு கூறப்படுகிறது. இவர்கள் ஒரு ஆசிரமத்திலிருந்து இன்னொரு ஆசிரமத்திற்குப் போகும்போது ராம,லட்சுமண வயதை ஒத்த ரிஷி குமாரர்களும் சேர்ந்து அவர்களுடன் இரண்டாவது ஆசிரமத்திற்குப் புறப்பட்டார்கள்.
பின்னர் இரண்டாவது ஆசிரமத்திலிருந்து மூன்றாவது ஆசிரமத்திற்கு செல்லும்போதும் அங்குள்ள சில ரிஷி குமாரர்களில் ராம,லட்சுமண வயதை ஒத்த சில ரிஷி குமாரர்களும் அவர்களுடன் இணைந்து கொண்டனர்.
மூன்றாவது ஆசிரமத்திலுள்ள பெண்கள் ராமன்,லட்சுமணன்,சீதா தேவி ஆகியோருடன், முதல் மற்றும் இரண்டாவது ஆசிரமத்து இளைஞர்களையும் ஒருசேரக் கண்டனர். அப்புதியோர் கூட்டத்தில் சீதை மட்டும் பெண் என்பதால் அவர்கள் சிதையை அடையாளம் கண்டு கொண்டனர். மற்றவர்களில் யார் ராமர், லட்சுமணர் என்பது அப்பெண்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் சீதையிடம் ஒவ்வொரு இளைஞனாகக் காட்டி இவர் ராமரா? இவர் ராமரா? என்று கேட்டனர். ஒவ்வொருவரையும் சுட்டும்போது சீதையும் இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை என்று சொல்லிக் கொண்டே வந்தாள்.
லட்சுமணன் பக்கம் வந்த போது இவர் ராமர் இல்லை என்றாள்.
இறுதியில் ரிஷிபத்தினிகள் ராமரைச் சுட்டிக் காட்டி இவர் ராமரா? என்று கேட்டார்கள். சீதை நாணத்தால் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
இவர்தான் ராமர் என்று கூறவில்லை.ஏனெனில்,
உலகில் பரம்பொருளைத் தவிர மற்றவற்றைக் காணும்போது இது பரம்பொருள் அல்ல என்று சாதகன், தெய்வபக்தன் கூறுவான். பரம்பொருளைக் காணும்போது உடன்பாட்டுக் குணங்களால் வருணிக்க முடியாது என்பதால் இது பரம்பொருள் என்று கூறமாட்டான்.
இதுவே நேதி, நேதி என்னும் தத்துவமாகும். பரம்பொருளைக் கணடதும் பேச்சு நின்றுவிடும். அத்தகைய உயர்நிலையை அடைந்தவர்கள் மௌனி என்றும் முனிவர்கள் என்றும் சொல்லப்படுவர்.
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a
Friday, February 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment