ராமனும், லட்சுமணனும் ஆஞ்சனேயனை அணுகினர். அன்னவன் அவர்களைக் கூர்ந்து நோக்கினான்.
" முரண்பாடே வடிவெடுத்துள்ள நீங்கள் யார் ? என்ன நோக்கத்துடன் இங்கே வந்திருக்கிறீகள் ? " என்று அவன் அவர்களை விரட்டுகிற பாங்கில் வினவினான்.
லட்சுமணன் : எங்களிடத்து நீ காணும் முரன்பாடு யாது ?
அனுமான் : பார்த்தால் தேவர்கள் போன்று தென்படுகிறீர்கள். ஆனால் உங்களுடைய பாதங்கள் பூமியில் படிகின்றன. தவசிகள் கோலம் பூண்டிருக்கிறீர்கள். ஆனால் கொடிய ஆயுதங்கள் உடைத்திருக்கிறீர்கள். ஞானிகள் போன்று தென்படுகிறீர்கள். ஆனால் விசனத்தில் மூழ்கியிருக்கிறீர்கள். ஞானியர்களுக்குத் தேடுதலும் தவிர்த்தலும் இல்லை. ஆனால் நீங்களோ இழந்துவிட்ட எதையோ தேடுபவர்கள் போன்று தென்படுகிறீர்கள் இவைகள் தாம் நான் உங்களிடம் கண்ட முரண்பாடு.
ராமன் : லட்சுமணா, இவன் கற்றவன். இவனோடு நட்புப் பூணுவது நமக்கு நலன் விளைவிக்கும். நம்மை இவனுக்கு அறிமுகப்படுத்து.
நன்றி -- மூலம் --> http://www.muthamilmantram.com/viewtopic.php?f=159&t=18617&st=0&sk=t&sd=a
Friday, February 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment